யாழில் ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் மரணம்
சைக்கிளில் பயணித்த வயோதிபரை கார் பின்னால் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஏ–9 பிரதான வீதியில் சாவகச்சேரி நியூமெடிக்கெயர் மருத்துவமனைக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான நுணாவில் மத்தியைச் சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது - 74) என்பவர் உயிரிழந்துள்ளார்.
கார் மோதியதில் உயிரிழப்பு
திடீர் சுகவீனமுற்று சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினரை பார்ப்பதற்கு அவர் சென்றுள்ளார். எனினும், அந்த உறவினர் இறந்துவிட்டாரென மருத்துவர்கள் கமலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலை வீட்டாருக்கு சொல்வதற்காக சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
