பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல் - 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரம் - எப்பாவல நகரில் உள்ள அரச பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது மாணவர் ஒருவர் ஐந்து பேரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும், காயமடைந்த ஐந்து மாணவர்களும் எப்பாவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து - இரண்டு பேருந்துகள் மோதி விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
மாணவர்களுக்கு இடையே மோதல்
இவ்வாறு காயமடைந்த மாணவர்கள் எப்பாவல நகரில் உள்ள பிரபல பாடசாலையில் 12 ஆம் வகுப்பில் பயிலும் தொழில்நுட்ப மாணவர்கள் ஆவர்.

அதே பாடசாலையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு அறிவியல் மாணவர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலையும் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய மாணவருக்கும், அதில் காயமடைந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, இன்று காலை (13) கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவன் கைது
கூர்மையான ஆயுதத்தால் ஒரு மாணவரை தாக்கியபோது அதனை தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டுவந்து 5 மாணவர்களைக் காயப்படுத்திய மாணவன், சம்பந்தப்பட்ட ஆயுதத்துடன் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து எப்பாவல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல், அறிகுறிகள் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை