ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளை தளர்த்த நடவடிக்கை
இதேவேளை ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைய வாய்ப்பாக அமையும்.
சில சந்தர்ப்பங்களில், சேவை வருங்கால வைப்பு நிதியிலிருந்து 30 சதவீத சலுகைகளை பெறும்போது சிலர் மோசடியான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தூண்டப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, இடைத்தரகர்களின் தலையீடும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri
