சமஷ்டிக்கு புதிய வரைவிலக்கணம் கூறும் கஜேந்திரன் குழு: ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் குற்றச்சாட்டு(Video)
இருதேசம் ஒரு நாடு என பூச்சாண்டி காட்டி வருபவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலைங்கை இனவாத சக்திகளுக்கு சோரம் போகின்றனர் என ஈழ மக்கள்ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சமீபத்தில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இரா சம்பந்தன் பொறுப்பற்ற பதில்
இதன்போது பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றிருந்தன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தசட்டம் தொடர்பில் இந்திய விஜயத்துக்கு பின்னர் ஆற்றிய விசேட உரை தொடர்பில் தான் உரிய நேரத்தில் பதில் வழங்குவேன் என வழமை போன்று பொறுப்பற்ற கருத்தை கூறியுள்ளார்.
அதேநேரம் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறி சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுகின்ற காரியங்கள் அனைத்துமே பூச்சாண்டி காட்டுகின்ற வேலையாகத்தான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறியிருந்தார்.
சமஷ்டிக்கு புதிய வரைவிலக்கணம்
ஆனால் சமஸ்டியே தீர்வு என கூறியவர்கள் பின்னர் இரு தேசம் ஒரு நாடு என்றவர்கள் தற்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிதான் சமஸ்டி என புதுவரைவிலக்கணம் கூற முனைகின்றனர்.
கஜேந்திரன் குழுவின் இரு தேசம் ஒருநாடு என்ற நிலைப்பாடு என்னாச்சு? உண்மையில் தெளிவான அரசியல் நிலைப்பாட்டு கொள்கை இல்லாதவர்களே இவ்வாறு வாக்குகளை இலக்கு வைத்து நாளொரு பொய்யும் பொழுதொரு புழுகுமாகா அவ்வப்போது அறிக்கை இட்டு வருகின்றனர்.
இதனால் ஏமாற்றப்பட உள்ளவர்கள் தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
