வடக்கு, கிழக்கில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டி
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (12) நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஈ.பி.டி.பி தனது தனித்துவத்துடனேயே அனைத்து தேர்தல்களிலும் முகங்கொடுத்து வருகின்றது.
வீணைச் சின்னம்
குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
