வடக்கின் மீன்பிடி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா! எழுந்துள்ள சந்தேகம்(Video)

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fisherman
By Kajinthan Nov 15, 2023 09:03 AM GMT
Report

இன்றைய சூழலில் மீனவ மக்கள் கடும் இன்னல்கள் மற்றும் அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மீன்பிடி படகு

யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அலோசிக்கப்படுகிறது.

வடக்கின் மீன்பிடி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா! எழுந்துள்ள சந்தேகம்(Video) | Environment The Fishermen Are Suffering

அதேவேளை இந்திய இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளூர் இழுவை படகுகளின் தாக்கம் பெரிதாக இருக்கின்றது.


தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள், அவர்களுடைய வருகை, மிகவும் மிகையாகவும் இங்குள்ள மீன்வளங்களை வாரிச்செல்லும் நோக்கத்திலே சகலதும் நடைபெற்றுவரும் வேளையில் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கில் மீன்பிடி உற்பத்திக்கும் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்குமென 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுமதியை கொடுத்துவிட்டு வெளிநாட்டு படகுகள் இங்கு வந்து ஆக்கிரமித்து மீனை அள்ளிக்கொண்டு போவதற்கு அனுமதி அளித்துவிட்டு எமது மீன்பிடி அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கியிருப்பது மிகவும் சிந்திக்கவேண்டிய விடயமாக காணப்படுகின்றது.

வடக்கின் மீன்பிடி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா! எழுந்துள்ள சந்தேகம்(Video) | Environment The Fishermen Are Suffering

சந்தேகமான விடயம் 

அதேவேளை 30 வருடங்களுக்கு மேலாக போரினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இதுவரை ஒரு ஆக்கபூர்வமான நிவாரணமோ அல்லது இழப்பீடுகளோ வழங்கப்படாத நிலையில் கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பது எங்களை சிந்திக்க வைத்துள்ளது.

இது இங்கே அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவா அல்லது வெளிநாட்டு சக்திகளை இங்கே கொண்டுவந்து அவர்களுடைய இருப்புகள் மற்றும் அவர்களுடைய நிலையங்களை பலப்படுத்துவதற்காகவா என்று தெரியவில்லை.

இந்த 500மில்லியன் ரூபா எதற்காக ஏன் இப்போது ஒதுக்கியிருக்கின்றார்கள் என்ற விபரத்தை நாம் தெளிவாக அறிந்த பின்னர் தான் இதற்கான முடிவுகளை எட்ட வேண்டும். இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலே இதுவுமொரு சந்தேகமான விடயமாக பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

அளம்பில் துயிலும் இல்ல சிரமதான பணி ஆரம்பம்: இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறு கோரிக்கை

அளம்பில் துயிலும் இல்ல சிரமதான பணி ஆரம்பம்: இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறு கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US