சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் மாபெரும் சிரமதானம்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதான பணியானது நேற்றையதினம் (04.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரமதான பணி
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் நோக்கத்துடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு சிரமதான பணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரகாசமான எதிர்காலத்திற்காக நிலத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிக்கபடவுள்ளது.
குறித்த சிரமதான பணியில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) சி.ஜெயகாந்தன், முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத், இராணுவத்தினர், வர்த்தக சங்க தலைவர் நவநீதன் , சிவில் பாதுகாப்பு பிரிவினர், சுகாதார துறையினர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொலிஸார், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.