அரசாங்கம், அமைச்சர்கள் மாற்றத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உருவாக்கப்படவுள்ள கொள்கைகள்
இலங்கையின், அரசாங்கத்திலோ அல்லது அமைச்சர்களில் மாற்றம் ஏற்பட்டாலும் அமைச்சகங்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு தேசிய சுற்றுச்சூழல் கொள்கைககள் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான பணிப்புரையை, அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜெயசிங்க,தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் கொள்கைகளை வரைந்து இறுதி செய்யுமாறு, அமைச்சர் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்துக்கு, சுற்றாடலில் கரிசனைக்கொண்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெறப்பவுள்ளது.
இந்தவகையில் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுத்தால் அதை யாரும் எதிர்க்க முடியாது. என்று அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam