எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்படும் நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.
| வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை |

திறக்கப்படும் விசேட நுழைவாயில்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்ப்பதே இதன் நோக்கம்.

அத்துடன் இதன்மூலம் சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களை அடையாளம் காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
| கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு பணி |
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan