உக்ரைனில் பாடசாலையின் மீது ரஷ்ய படையினரின் விமானத் தாக்குதல்! 60 பேர் மரணம் என அச்சம்!
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய படையினர் நடத்திய விமானக் குண்டு தாக்குதலில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டபோதும் 60 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடக்கக்கூடும் என்று நகர ஆளுநர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
சுமார் 90 பேர் இந்த கட்டிடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் தாக்குதலின் பின்னர் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில் 60 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யாவிடம் இருந்து உடனடி கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்த குண்டுத் தாக்குதலில்போது கட்டிடம் தீப்பிடித்தது, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரத்தை செலவிட்டனர்.