நாடு முழுவதையும் வனக்காடாக தான் மாற்ற வேண்டும்: சிறீதரன் ஆதங்கம் (Video)
கண்டல் தாவரம் இருக்கும் இடமெல்லாம் வனவள திணைக்களத்திற்கு தான் தேவை என்றால் இந்த நாடு முழுவதையும் வனக்காடாக தான் மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.12.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களாக இருக்கும் காரைநகர் தொடக்கம் பொன்னாலை வரையான பகுதிகளில் கண்டல் தாவரங்கள் 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டப்பட்டன.
குறிப்பாக கடலரிப்பை தடுக்கவும், மீன் வள உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், கடல் வளம் பேணுவதற்காக கண்டல் தாவரங்கள் காரைநகர், வேலணை, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களில் நாட்டப்பட்டது.
ஆனால் இப்பொழுது 10 ஆண்டுகள் கழித்து வன வள திணைக்களம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக கிட்டத்தட்ட 380 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை வன வள திணைக்களத்திற்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது.
கண்டல் தாவரம் இருக்கும் இடமெல்லாம் வனவள திணைக்களத்திற்கு தான் தேவை என்றால் இந்த நாடு முழுவதையும் வனக்காடாக தான் மாற்ற வேண்டும்.
மக்களுடைய காணிகளை பறிப்பதை அவர்களுடைய மீன்பிடி தொழிலை கெடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக, இந்த உயரிய சபை மூலம் கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
