தேசிய ஊடக ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த இரண்டாவது சந்தேக நபரும் கைது
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது சந்தேகநபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சந்தேகநபர் சரணடைந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (45) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஊடகம்
இதேவேளை, கடந்த ஜூலை 13 ஆம் திகதி ரூபவாஹினி கலையகத்துக்குள் நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஆர்ப்பாட்டக்காரரான தானிஷ் அலி என்ற சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸாரினால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு
இந்நிலையில் ருவான் விஜயமுனி என்ற ஒரு நபர் கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
மேலும், இன்னும் பல போராட்டக்காரர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
