இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் முன்வைத்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளில் இலங்கையின் பல சிறைகளிலும் தமிழக கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலர் இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இது இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்ட விடயமாகினும் கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
போலியானது என சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு! முன்னாள் எம்.பிக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட சிக்கல்
வன்முறை
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் பின்பும் ஒன்றன் பின்பு ஒன்றாக இன்று பல சிறைகளிலும் வன்முறை பரவுவதாகவே இலங்கை செய்திகள் உள்ளது. தற்போது கொழும்பு மெகசின் சிறை, குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் இந்த வன்முறை வெடித்ததுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
எனவே இந்த விடயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.