வாகன இலக்கத் தகடுகளில் அறிமுகமாகும் புதிய முறைமை
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
தொழிநுட்பக் குறைபாடு
எனினும் தற்போது நடைமுறையிலுள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானது என்பதால் அதில் உள்ள தொழிநுட்பக் குறைபாடுகள் காரணமாக இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது.
எனவே, தற்போதுள்ள கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள கணினி அமைப்பு புதுப்பிக்கப்பட்ட பின், ஆறு மாத காலத்திற்குள் இந்த விசேட திட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

இலக்கத் தகடு முன்பதிவு
குறிப்பிட்ட இலக்கத் தகடுகளை முன்பதிவு செய்வதற்காக 100,000 ரூபா முதல் 1 மில்லியன் ரூபா வரை கட்டணம் அறவிடப்படுகிறது. ஏற்கனவே சிலர் ஒரு மில்லியன் ரூபா செலுத்தி இவ்வாறான இலக்கத் தகடுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.