இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு!
இந்திய(India) மற்றும் இங்கிலாந்து(England) அணிகளுக்கிடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதற்கமைய, டி20 போட்டி தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
5 டி20 போட்டிகள்
முதல் டி20 போட்டி ஜனவரி 22ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. 2ஆவது டி20 போட்டி, 25ஆம் திகதி சென்னையிலும், 3ஆவது போட்டி 28ஆம் திகதி ராஜ்கோட்டிலும் நடைபெறவுள்ளன.
4ஆவது டி20, 31ஆம் திகதி புனேவிலும், கடைசி போட்டி பெப்ரவரி 2ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6ஆம் திகதி, நாக்பூரில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9ஆம் திகதி கட்டாக்கில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 3ஆவது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 12ஆம் திகதி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் பகல் 1:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் மூன்று போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (அணித்தலைவர்), சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துரூவ் ஜீரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, வொஷிங்டன் சுந்தர்.
இந்த தொடர் முடிந்த உடன், பெப்ரவரி 19ஆம் திகதி செம்பியன்ஸ் ட்ரொபி தொடரும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |