இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு கட்டண அபராதத்துடன் புள்ளிக்குறைப்பு தண்டனை
கிறிஸ்ட்சேர்ச்சில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர்களை வீசியதன் காரணமாக, இங்கிலாந்து (England) மற்றும் நியூசிலாந்து (New Zeland) அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு அணிகளுக்கும் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமும், மூன்று உலக டெஸ்ட் செம்பியன்சிப் போட்டி புள்ளிகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டி நடுவர்களான டேவிட் பூன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் டொம் லாதம் ஆகியோரைக் கொண்ட குழு, இரு தரப்பிலும் நேர ஒதுக்கீடுகளை பரிசீலிக்கப்பட்ட பின்னர் இலக்கை விட மூன்று ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருப்பதை கண்டறிந்ததை அடுத்து, இந்த அபராதத்தை விதித்துள்ளது.
முறையான விசாரணை
அதற்கமைய, ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்சிப் விளையாடும் நிபந்தனைகளின் படி, ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி என்ற அடிப்படையில் இரண்டு அணிகளுக்கும் புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரண்டு அணி தலைவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டனர்.
எனவே, முறையான விசாரணை தேவையில்லை என்று போட்டி நடுவர்கள் குழு தீர்மானித்துள்ளது.
கள நடுவர்களான அஹ்சன் ராசா மற்றும் ரொட் டக்கர், மூன்றாவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் மற்றும் நான்காவது அதிகாரி கிம் கொட்டன் ஆகியோர் இந்த நேர விரய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |