தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு - 6 இலட்சம் பெறுமதியான வலைகள் இழப்பு
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன் பிடிப்பதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(05.09.2026) இடம்பெற்றுள்ளது.
6 இலட்சம் பெறுமதியான வலை சேதம்
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri