உள்ளூர் மருந்து உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை
இலங்கையின் மருந்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையின் போது உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்கு முதலிடம் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக உள்நாட்டு மருந்து உற்பத்திகளை கொள்வனவு செய்து, மருத்துவ விநியோகத் துறைக்கு வழங்கும் நடைமுறையை நிறுத்துமாறு இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

500 மில்லியனை சேமிக்கலாம்
உள்ளூர் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் 15 மருந்துகளை நேரடியாக கொள்வனவு செய்வதன் மூலம் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யும் போது உற்பத்தியாளர்கள் மேலதிக செலவொன்றை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அதன் காரணமாக குறித்த மருந்து வகைகளை கொள்வனவு செய்யும் போது, சுகாதார அமைச்சு அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri