இந்திய படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் காஷ்மீரில் மோதல் தொடர்கிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் இன்று காலை ஆரம்பித்த இந்த சண்டை மாலை வரை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், இந்திய காஸ்மீரில் தாக்குதல்களை நடத்தி வருவதாக இந்திய படையினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்
எனினும் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
தொடர்புடைய செய்தி
இந்திய காஷ்மீர் பகுதியில் மூண்டது மோதல்! சேத விபரங்கள் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
