நூற்றுக்கணக்கான வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் கடத்தப்பட்ட வாகனம் பொலிஸாரால் மீட்பு (Photos)
வவுனியா - நெளுக்குளம் பகுதியில் இருந்து 648 வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் கடத்தப்பட்ட வாகனம் நெளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (05.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.
நெளுக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் எரிவாயு கொள்கலன் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் வர்த்தக நிலையப் பகுதிக்கு வந்த எரிவாயு வாகனம் 648 வெற்று கொள்கலன்களுடன் நிறுத்தப்பட்டிருந்தது.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது, அங்கு வந்த குறித்த பெண்ணின் மூத்த மகன் வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் அங்கு நின்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தனது மகனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் மீட்டுள்ளதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும் வாகனத்தையும் நீதிமன்றில் முற்படுத்த நெளுக்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam