ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பெருந்தொகை பணமோசடி
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.
இராஜகிரிய, கலப்பலுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக 813,000 ரூபாவைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குறித்த சந்தேகநபர் இதுவரை 8,390,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேகநபருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
