வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(18.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது மதில் இடிந்து விழுந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இதனையடுத்து, தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பும் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படாதிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri