ஆட்ட நாயகன் விருதை மறைந்த தந்தைக்கு காணிக்கையாக்கிய இளம் வீரரின் நெகிழ்ச்சி செயல்
இலங்கை அணியின் நட்சத்திர இளம் வீரர் துனித் வெல்லாலகே தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை மறைந்த தனது தந்தைக்கு காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களினால் வெற்றி ஈட்டியது.
இந்த வெற்றியின் பிரதான வீரராக துனித் வெல்லாலகே சகல துறை பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

துனித் 10 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுடன் 12 பந்துகளில் 25 ஓட்டங்களை ஆட்டம் இழக்காது பெற்றுக் கொண்டார்.
துனித்தின் சகலதுறை ஆட்டம் இலங்கையை அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக அமையப்பெற்றது.
அண்மையில் நடைபெற்ற ஆசிய கிண்ண போட்டி தொடரின் போது துனித் வெல்லாகேவின் தந்தை திடீர் மாரடைப்பினால் காலமானார்.
நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற துனித் வெல்லாலகே, தாம் இந்த விருதினை தந்தைக்கு காணிக்கையாக்குவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த விருதை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எங்கோ இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
நாட்டுக்காக நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அவரது ஆசை. அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார் என துனித் தெரிவித்துள்ளார்.
போட்டி வெற்றியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam