எழுமாறான கோவிட் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்
எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கை அவதானிக்க முடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதிலும் எழுமாறான அடிப்படையில் கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் என்டிஜன் பரிசோதனை நடாத்துவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்று கூடுதல், கூட்டங்கள், பல்வேறு செயற்பாடுகள் காரணமாக நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.