கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் ஆபத்தான நிலையில் அணைக்கட்டு! மக்களிற்கு அவசர எச்சரிக்கை
கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள கந்தன்குளத்தின் அணைக்கட்டின் ஊடாக பெருமளவு நீர் வெளியேறி வருவதனால் அணைக்கட்டு ஆபத்தான நிலையில் காணப்படும் நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டின் துருசு பகுதியின் அருகில் குளத்திலிருந்து நீர் அணைக்கட்டின் ஊடாக வெளியேறிவருகிறது.
இது அணைக்கட்டின் மிக மோசமான நிலைமையாகும், தற்போது இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் இணைந்து மண் மூடைகளை அடுக்கி தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் சேவியர் கடைச் சந்திக்கருகில் குளத்தின் கீழ் பகுதி மற்றும் கந்தன்குளத்தின் நீர் வெளியேறுகின்ற உருத்திரபுரம் பகுதியில் வாழ்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி கந்தன் குளத்தின் உடைப்பை நிறுத்த பிரதேச மக்கள், இராணுவம் அயராத முயற்சியின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலைமைகளை பார்வையிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்.











புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam