இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு ஆபத்து - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள் மத்தியில் பரவுவதனை தடுக்க பெற்றோர் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என, அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்ட மருத்துவர் பிரசன்ன குணசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுனிசெப் அமைப்பின் தரவுகளுக்கமைய ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள் 0.4 சதவீதமானோர் உயிரிழக்கும் ஆபத்துக்கள் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 4 மில்லியன் சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 0.4 வீதம் கணக்கிட்டால் 16 ஆயிரம் சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் நாட்டில் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படுவதனை தடுப்பதற்கு பெற்றோர்கள் உடனடியாக செயற்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கையாக உடனடியாக பெற்றோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதனால் மிகப்பெரிய அவதானமிக்க ஒரு சூழலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மருத்துவர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.