கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! தயார் நிலையில் மீட்பு படையினர்
கொழும்பில் இன்று(16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான காற்று, இடி மற்றும் மின்னுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து உடனடி நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
தயார் நிலையில் மீட்பு படையினர்
இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி, பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தற்காலிக மின்னல் மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக, பொதுமுக்கள் அவதானத்துடன் இருக்கவும், அவசர தேவைகளுக்கு உடனடியாக கொழும்பு மாநகர சபையைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும் 011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam