யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.
சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது.
முகக்கவசம் அணிவது சிறந்தது

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு வீதம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை.
கொழும்பு நகரில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த சுட்டெண் அதிகமாக காணப்படும். அந்த இடங்களில் முகக்கவசங்கள் அணிவது நல்லது. தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதற்குரிய பயம் தேவையில்லை. முகக் கவசம் கட்டாயம் அணியதேவையில்லை. ஆனால் அணிவது தவறில்லை.
நாங்கள் மக்களை பயப்படுத்தக்கூடாது. தற்போது தாழமுக்க சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கால நிலையினால், தான் இந்த குளிர்ச்சூழல் அதிகமாக காணப்படுகின்றதே தவிர மக்கள் இந்த வளி மாசடைந்ததன் காரணமாக இந்த நிலை ஏற்படவில்லை என்பது தான் உண்மை என குறிப்பிட்டார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri