மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் பதற்றம்! இலட்சக்கணக்கான இலங்கையர்கள் குறித்து அவசர கூட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:- மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, அங்கு பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இதன்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளன.
இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும்.
அத்தியாவசிய துறைகளில் பாதிப்பு
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தின் முடிவில், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தவும், உரிய அழுத்தங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடி இலங்கைக்குப் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றுகூடல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri