சீரற்ற காலநிலை தொடர்பில் சரியான தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டும் : பிரமித்த பண்டார

Sri Lanka Climate Change Weather
By Independent Writer May 27, 2024 06:12 PM GMT
Report

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் சரியான தகவல்களை மாத்திரம் மக்களுக்கு வழங்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். 

குறித்த விடயத்தினை அவர் இன்று (27.05.2024) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு


தென்மேற்கு பருவமழை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள 212 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் 55406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் வானிலை அவதான நிலைய தகவல்களின் அடிப்படையில், தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

சீரற்ற காலநிலை தொடர்பில் சரியான தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டும் : பிரமித்த பண்டார | Emergency Management Weather Related Incidents

அனர்த்த முகாமைத்துவ நிலையம் ,மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களும், குறிப்பாக முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் தயார் நிலையில் இருக்கிறது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கொழும்பில் உள்ள அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

தொடர்ந்தும் உயரும் டொலரின் பெறுமதி

தொடர்ந்தும் உயரும் டொலரின் பெறுமதி

ஆபத்தான மரங்கள்

இதன்படி, ஆயுதப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உதவியுடன் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அகற்றப்படும் மரங்களுக்கு மாற்றாக வீதிகள் மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொருத்தமான மரங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் விழுந்த மரங்களின் வேர்களை விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்வதற்கு தேவையான உபகரணங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை தொடர்பில் சரியான தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டும் : பிரமித்த பண்டார | Emergency Management Weather Related Incidents

கேகாலை மாவட்டத்தின் கடுகன்னாவ கீழ் பிரதேசத்தில் பாறைகள் விழும் அபாயம் உள்ள பல ஆபத்தான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் அங்குள்ள ஆபத்தான பாறைகளை அகற்றுவதற்கு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ள “சுரக்கிமு” என்ற விசேட தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு, உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்


நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US