நாட்டில் அவசரகால சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது! முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
நாட்டில் அவசரகாலச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு அரசியல் மாற்றம் மற்றும் பொறுப்புகூறல்களை எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பலருக்கு அச்சுறுத்தல்
போராட்டக்காரர்களை எதேச்சதிகாரமாக கைது செய்வதற்கு அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதல் போராட்டக்காரர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.