அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! சம்பவ இடத்தில் விமானப்படை : நால்வர் வைத்தியசாலையில்
புதிய இணைப்பு
நீர்கொழும்பு - கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீகிரிய விமானப் படைத் தளத்தில் இருந்து கொக்கலை நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த கட்டுநாயக்க விமானப்படையின் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தக்கொன்ன பகுதியில், சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறய ரக விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.






