அவசரகால நிலை மேலும் நீட்டிப்பு! வெளியான வர்த்தமானி அறிவிப்பு
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர், டி. என். எஸ். நந்திக சனத் குமாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்தால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அத்தியாவசிய சேவைகள் அறிவிப்பு
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பொது அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்பாதுகாப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அரச கூட்டுத்தாபனம், அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, வர்த்தமானி அறிவிப்பை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள், சுகாதார சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.