டுவிட்டர் நிர்வாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் எலான் மஸ்க்!
டுவிட்டர் நிறுவனத்தை தற்போது எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அந்நிறுவனத்தை வாங்கிய உடன் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.
பணியாளர்களை நீக்க உத்தரவு
வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதிக்குள் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி
மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிற நிலையில் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்து 2 ஆயிரமாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி
இதற்கிடையே டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார். மேலும் அவர், புளூஸ்கை என்ற பெயரில் ஒரு சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
