உலகத்திற்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை
உலக நாடுகள் எதிர்பாராத முக்கியமான ஒரு ஆபத்தை சந்திக்கவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவரும் உலகின் செல்வந்தர்களின் ஒருவருமான எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதுடன், வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது.
உலகின் வெப்பநிலையானது, அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
ஐ.நா. வெளியிடப்பட்ட அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
அத்துடன் கோவிட் போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் கூட கோவிட்டின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் ஆரம்பித்தது.
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு எதிர்பார்க்காத முக்கியமான ஒரு ஆபத்து ஏற்பட்டு உள்ளது அதன்படி மக்கள்தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
Population collapse is the biggest threat to civilization.
— DogeDesigner (@cb_doge) August 21, 2023
• Japan had it's largest total drop in population since 1968.
• U.S. population flatlining as birth rate stagnates.
• China's fertility rate hits record low.
• Singapore's birth rate falls to record low.
• UK… pic.twitter.com/OwloSfysBi
ஜப்பான் 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகையில் மிகப்பெரிய மொத்த வீழ்ச்சியைக் கொண்டுள்ளது.
• பிறப்பு விகிதம் தேக்கமடைவதால் அமெரிக்கா நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
• சீனாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை சரிந்து வருகிறது.
• சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
மிகப்பெரிய அச்சுறுத்தல்
• பிரித்தானியாவில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
• இத்தாலியின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தது.
• உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கான அவல சாதனையைத் தென் கொரியா மீண்டும் மேற்கொண்டு உள்ளது.
மக்கள் தொகை சரிவு காரணமாக ஏற்படும் இந்த பாதிப்புதான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
you may like this

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
