முடிவுக்கு வருகிறதா டுவிட்டர் விவகாரம்! எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கை
டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், அமெரிக்க கோடீஸ்வரரான எலான் மஸ்க், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்கு வாங்க முன்வந்தார். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.
வழக்கு விசாரணை
ஆனால், திடீரென இந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என தெரிவித்தார்.
மஸ்க்கின் இந்த முடிவை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒக்டோம்பர் 28ம் திகதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.
எலான் மஸ்க் நேற்று மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்த உடன்படிக்கையை முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் (இன்றுக்குள்) முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
டுவிட்டரின் தலைமை அலுவலகத்துக்கு எலான்
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டரின் தலைமை அலுவலகத்துக்கு எலான் மஸ்க் நேற்று சென்றுள்ளார்.
அவர் தனது கையில் வாஷ் பேசின் (சிங்க்) ஒன்றை சுமந்து சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ள மஸ்க்,
தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டுவிட்டர் தலைவர்’ என்றும் மாற்றி உள்ளார்.
மஸ்க், ஏன் கையில் பாத் ரூம் சிங்கை கொண்டு வருகிறார் என்று நிர்வாகிகள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு செய்தியில் மூழ்கி போய் விடுங்கள் என்று பொருள்படும் வகையில் ‘லெட் தி சிங்க் இன்’என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதை குறிப்பிடும் வகையில்தான் எலான் மஸ்க் சிங்க்கை கொண்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
75% ஊழியர்கள் பணி நீக்கமா?
இதற்கிடையில் எலான் மஸ்க் வசம் டுவிட்டர் சென்றவுடன் அவர் 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று டுவிட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க்கே விளக்கமளித்துள்ளார்.
ஆனாலும் டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் நிச்சயமாக மஸ்க் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் டுவிட்டரை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
