உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!
அமெரிக்காவின்(USA) பிரல்யமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை உலகின் 24 சூப்பர் பில்லியனர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த சூப்பர் பில்லியனர்கள் 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் நிகர மதிப்பைக் கொண்டுள்ளனர்.
முதலிடத்தில் எலோன் மஸ்க்
தொழில்நுட்பம், வணிகம் என பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக உள்ளவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா(Tesla) உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk) முதலிடம் பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 419.4 பில்லியன் டொலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சென்டி-பில்லியனர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்திய பணக்காரர்கள்
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் உள்ளார்.
மூன்றாம் இடத்தில், LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
அடுத்த இடங்களில் லாரன்ஸ் எலிசன், மார்க் ஜூக்கர்பெர்க், செர்ஜி பிரின், ஸ்டீவன் பால்மர், வாரன் பஃபெட் மற்றும் ஜேம்ஸ் வால்டன் ஆகியோர் உள்ளனர்.
இதேவேளை, இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி 17வது இடத்தையும், கௌதம் அதானி 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 10 மணி நேரம் முன்

அமெரிக்காவுக்கு பதில் ரஷ்யாவுக்கு செல்லுங்கள்! கடும் எதிர்ப்பால் அவசரமாக வெளியேறிய ஜே.டி.வான்ஸ் News Lankasri
