ட்ரம்ப்பின் முக்கிய ஆணைக்குழுவில் தலைவராகும் எலான் மஸ்க்
2024ஆம் ஆண்டு நவம்பர் 5 நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், தமது பில்லியனர் ஆதரவாளரான எலான் மஸ்க் (Elon Musk) தலைமையில் அரசாங்க செயல்திறன் ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ((Donald Trump) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் பல வாரங்கள் உதவியாளர்களுடன் ஒரு செயல்திறன் ஆணைக்குழு தொடர்பில் விவாதித்த நிலையிலேயே இந்த அறிவிப்பு இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட கால உரையாடல்
இந்தநிலையில், தமது யோசனையை, எலான் மஸ்க்கும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் பார்வை என்ற தலைப்பில் நியூயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,
"உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான கூட்டு வரி விகிதங்கள் குறைக்கப்படும் அதேவைளை, கூட்டாட்சி நிலங்களில் குறைந்த வரி மண்டலங்கள் நிறுவப்படும்” என உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam