எலான் மஸ்க் எந்தவித பொறுப்பிலும் இல்லை! ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க், 'Doge' என அழைக்கப்படும் அரசாங்கத்தின் செயற்றிறன் குழுவில் எந்தவொரு பொறுப்பையும் வகிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரி ஜோசுவா ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய எலான் மஸ்க்கின் பங்கு இன்றியமையாததாக இருந்தது.
அத்துடன், ட்ரம்ப் பதவியேற்றத்திலிருந்து அவருடன் ஒன்றிணைந்து செயற்பட்ட மஸ்க், அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகளிலும் பங்காற்றினார்.
மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியர்
இந்நிலையில், மஸ்க் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக பணிபுரிகிறார் என்றும், டோஜின் பணியாளர் அல்ல என்றும் ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
எனினும், 'Doge' என அழைக்கப்படும் அரசாங்கத்தின் செயற்றிறன் குழுவை இயங்குவது யார் என்பது குறித்து அவர் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
முன்னதாக, வருடத்தில் 130 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக அரசாங்கத்தில் பணிபுரியும் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியர் என வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |