எல்ல பேருந்து விபத்துக்கான காரணம்.. வெளியான தகவல்
எல்ல வெல்லவாயவில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு, இயந்திரக் கோளாறே காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், இடிபாடுகளை ஆய்வு செய்து, இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
சரியான காரணம்..
இந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக நாளை, குறித்த அறிக்கை, அரச ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும்கூட, விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வூட்லர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



