ஆற்றில் கவிழ்ந்த கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஏற்பட்ட சோகம்..!
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
