நாட்டை உலுக்கிய விபத்து! நடத்துனர் கூறும் தகவல்
டிப்பர் வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டதாக எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது, பேருந்து வேகமாக சென்றதா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அந்தளவு வேகமாக பேருந்து பயணிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
பிரேக் செயலிழப்பு
மேலும், தனக்கு நடந்த அனைத்து விடயங்களும் நினைவில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து ஏற்பட்ட போது மயக்கமடைந்து வைத்தியசாலையிலேயே கண் விழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்தின் பிரேக் செயலிழந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நேற்று(04.09.2025) நள்ளிரவு ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும் 18 பேர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



