காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்கு ஓடி வரும் யானைகள்

Elephant Northern Province of Sri Lanka
By Yathu Apr 08, 2025 12:12 PM GMT
Report
Courtesy: Dharu

ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்' என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச் சந்திப்பதாலேயே இந்நிலைமை தொடர்கின்றது.

அடர் காடுகளுக்குள் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மரங்கள் வெட்டுதல், கனரக வாகனங்களைப் பயன்படுத்திக் காடுகளை அழித்தல், மணல் அகழ்வுகள் என்பவற்றால், காட்டு யானைகள் பெருங்காடுகளை விட்டு வெளியேறி, அவற்றின் வலசப் பாதைகளை விட்டுத் தடுமாறி, உணவு தேடி, மக்கள் குடியிருப்புகளை நாடி அலையும் அவல நிலையில், யானைகளின் வாழ்க்கை காணப்படுகிறது.

மனிதனின் தான்தோன்றித்தனமான சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக, யானைகள் குறுகிய காட்டுப்பிரதேசங்களுக்குள் வாழ வேண்டிய சூழலுக்குள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

வழமையான பிரச்சினை

இதனால், ஆண்டாண்டு காலமாக அவை சென்றுவந்த பாதைகள் (வலசப் பாதை) துண்டிக்கப்படுவதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கிய காரணமாக விளங்குகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

'இன்று இதுவும் கடந்துபோகும்; நாளையும் வரும்' என்ற வழமையான பிரச்சினைகளில் ஒன்றாக யானைகளால் விளையும் அச்சுறுத்தல்களும் அழிவுகளும் பாதிப்புகளும், தீர்வு காணப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன.

காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்கு ஓடி வரும் யானைகள் | Elephants Running Into Houses

குறிப்பாக, வனப் பிரதேசங்களை அண்டிய எல்லைப்புறக் கிராமங்களில், காட்டு யானைகளின் தொல்லையும் அச்சுறுத்தல்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

வன்னிக் காடுகளின் எல்லைப்புறக் கிராங்களில் வாழுகின்ற மக்கள், அன்றாடம் தமது வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்புகளையும் தினமும் தேடி அலையும் நிலையில், காட்டுயானைகளிடமிருந்து தங்களுடைய வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளையும் வாழ்விடங்களையும் தம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில், ஓர் அபாயகரமான நிலையிலேயே வாழ்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக்குளம் முதல் இரணைமடுக்குளத்தின் சாந்தபுரம் வரையான பகுதியும் அதேபோல், திருமுறிகண்டி முதல் பல்லவராயன்கட்டு, வேரவில், வலைப்பாடு, ஸ்கந்தபுரம், முட்கொம்பன், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகவே விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக, கல்மடுப் பகுதியில் காட்டுயானைகள் உட்புகுந்து வயல் நிலங்களையும் பெறுமதி வாய்ந்த தென்னை மரங்களையும் அழித்து வருகின்றன. இன்று தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகின்ற நிலையில், பயன்தரக்கூடிய பெருமளவான தென்னைமரங்கள், யானைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன.

திணைக்களங்கள் நடவடிக்கை

இதனால், இந்தத்தென்னை மரங்களின் வருமானத்தை நம்பி வாழும் மக்கள், தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு, யானைவெடிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்கு ஓடி வரும் யானைகள் | Elephants Running Into Houses

இவ்வாறு வழங்கப்படுகின்ற யானை வெடிகளுக்கு, யானைகள் பழக்கப்பட்டு விட்டன என கிராம வாசிகள் குறிப்பிடுகின்றனர். வடக்கில், காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைக்கவேண்டுமெனப் பல்வேறு வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும், அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், வன்னியில் காட்டு யானைகளின் தொல்லை மிகக் குறைவாகவே காணப்பட்டது. காரணம், யுத்தக் காலத்தில் அடிக்கடி பல பிரதேசங்களில் ஏற்படுகின்ற யுத்தத்தின் வெடிச்சத்தங்கள் காரணமாகவும் காடுகளின் எல்லைப்புற கிராமங்களில் பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் தாங்களாகவே அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை (கட்டுத்துவக்கு) பயன்படுத்தியமை போன்ற காரணங்களால், இன்றுள்ளமை போல மோசமான நிலைமை யானைகளால் இருக்கவில்லை.

உணவு, தண்ணீர், சீரான நிலை, வளர்ப்பு, பிரச்சினைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக யானைகள் 50 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இடம் பெயரும் தன்மை கொண்டவை.

பண்டைக் காலம் முதலாக, கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடர் காடுகளுக்குள் இருந்து, காட்டு யானைகள் ஆனையிறவு கடல்நீரேரி ஊடாக கடல் வற்றுக் காலங்களில் மருதங்கேணி, பளை ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்கே தமக்கான உணவைத் தேடிக்கொண்டு, அங்கேயே வாழ்ந்து விட்டு, மீளவும் ஆடி, ஆவணி மாதங்களில் அந்தப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, மீளவும் கிளிநொச்சிக் காடுகளை நோக்கி நகரும்.

இவ்வாறு யானைகள் கடக்கின்ற ஒரு பகுதியாகக் காணப்பட்ட 'ஆனையிறவு' என்ற வெட்டை அல்லது, இறவு என்ற பகுதியே, காலப் போக்கில் 'ஆனையிறவு' என்றாகியது என்பது, இன்றுள்ள முதியவர்கள் சொல்லக் கேள்விப்படுகின்றோம். இந்தச் சம்பவங்கள் அவர்கள் வழிவழியாக அறிந்துகொண்டவையாகும்.

யானை வேலி

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்திலிருந்து இரணைமடுக்குளம் வரையான பகுதிக்கும் இரணைமடுக்குளம் முதல் திருமுறிகண்டி வரையான பிரதேசங்களின் அடர் காடுகளின் எல்லையோரங்களில் சுமார் 23 கிலோ மீட்டர் நீளமான பகுதிகளுக்கு யானை வேலிகளை அமைப்பதற்கான முன்மொழிவுகள் கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டன.

காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்கு ஓடி வரும் யானைகள் | Elephants Running Into Houses

ஆனால் இன்றுவரை அது நடைபெறவில்லை ஆகவே, இந்தக் காட்டு யானைகளின் தொல்லை, மனிதன், இயற்கை மீது செலுத்துகின்ற ஆதிக்கம் மற்றும் இயற்கையை அழிக்கின்ற காரணத்தால் நிகழ்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதேவேளை, விலங்குகளும் மனிதனும் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதுதான் இயற்கை விதித்திருக்கும் விதியாகும்.

இங்கு மனிதனுக்கு யானை அச்சுறுத்தலா, யானைக்கு மனிதர்கள் அச்சுறுத்தலா என்பதற்கு அப்பால், இரண்டு விலங்கினங்களும் வாழவேண்டும். அதேவேளை காடுகளின் மத்தியில் இடம்பெறும் வள அபகரிப்புகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் நிறுத்தப்படவேண்டும். அவ்வாறு நிகழுமாயின் யானைகள், மக்கள் குடியிருப்புகளை நோக்கி நரும் சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறையும் என்பதாகும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Yathu அவரால் எழுதப்பட்டு, 08 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US