முல்லைத்தீவில் யானைகள் நடமாட்டம் : பாதிப்புக்குள்ளாகும் விளைச்சல்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) - விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்திலுள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது, நேற்றைய தினம் (08.05.2024) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 03 யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த தர்பூசணிகள் மற்றும் 100இற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் என்பனவற்றை சேதமாக்கியுள்ளன.
யானை வேலிகள்
மேலும், நீண்டகாலமாக அப்பகுதியில் யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் யானை வேலிகள் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து தமது பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருமாறு கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |