புதுக்குடியிருப்பில் வீதிக்கு வந்த யானை கூட்டம்: பயணிகள் அசௌகரியம்
புதுக்குடியிருப்பு- மன்னாகண்டல் பகுதியில் 20 இற்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் வீதிக்கு வந்தமையால் அந்த வீதியால் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்று (4) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு வந்த யானைக் கூட்டம் சுமார் 15 நிமிடங்கள் குறித்த பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றுள்ளன.
பயணிகள் அசௌகரியம்
20இற்கும் மேற்பட்ட யானைகள் வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றதுடன் சிலர் தூர விலகி நின்றனர்.
யானைகள் தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்தனர்.
அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதிகளில் அடிக்கடி யானைகள் வீதிக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
