அதிகாரத்தை பெற சண்டையிடும் யானைகள்: பார்வையிட குவிந்த மக்கள்(Photo)
காட்டுப்பகுதியில் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள யானைகள் சண்டையிடுவதாக வனவிலங்கு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சண்டையிட்டு கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளின் கருத்து
வனவிலங்கு அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் அதிகாரத்தை பெறுவதற்காகவே சண்டையிட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு யானைகளும் சுமார் இரண்டு நாட்களாக இந்த பகுதியில் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் நிலைப்பாடு
குறித்த இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தை பார்வையிட அதிகளவான மக்கள் அப்பகுதியில் குவிந்திருந்தார்கள்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
