குப்பைகளை உண்ண வரும் யானைகள்: அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விவசாயிகள் (Video)
அட்டாளைச்சேனை பகுதியில் குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்ற சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன.
மேலும், அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதுடன் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பகுதியில் தினமும் காரைதீவு ,கல்முனை ,அக்கரைப்பற்று, நிந்தவூர், உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவவான யானைகள் உயிரிழப்பு

மேலும் கடந்த காலங்களில் இப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட இரண்டு யானைகள் உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் 20 யானைகள் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை உற்கொண்டு உயிரிழந்ததுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் திறந்தவெளி குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் , பொலிதீன் கழிவுகள் தேங்குவதாலும் அப்பகுதியில் அதிகளவில் யானைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri