மட்டக்களப்பில் யானைகளால் விவசாய நிலங்கள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் கண்டத்திற்குள் யானைகள் புகுந்து பெரும்போக வேளாண்மைச் செய்கையின் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்திவிட்டுள் சென்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன.
அண்மையில் ஏற்பட்டிருந்த பலத்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் இவ்வாறு துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
காட்டுயானைகளின் தொல்லைகள்
காட்டுயானைகளிடமிருந்து தமது வேளாண்மைச் செய்கையைப் பாதுகாப்பதற்காக இரவு முழுவதும் நடு நிசியிலிருந்து பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நிண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


