முல்லைத்தீவு- இடைக்கட்டு கிராமத்தில் யானைகளால் அழிக்கப்பட்ட நெற்செய்கை நிலங்கள்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இடைக்கட்டு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நெற்செய்கை காட்டு யானையினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இடைக்கட்டு குளத்தின் கீழ் 60 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இன்னும் அறுவடைக்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில் நெற்பயிர்களை நேற்று(03) இரவு ஆறுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் நாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியான அழிவு
தொடர்ச்சியாக வரும் காட்டு யானைகளால் தாங்கள் அழிவினை சந்தித்துள்ளதாகவும் காட்டுயானையினை கட்டுப்படுத்த யானை வேலிகள் இதுவரை அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மருந்து விலை, கூலி விலை இவ்வளவிற்கு மத்தியில் விவசாயம் செய்துவரும் தாம் தொடர்ச்சியாக அழிவினையே சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri