வாழைச்சேனை குப்பைகள் நிறைந்த பகுதியில் உயிரிழந்து கிடந்த யானை: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடமொன்றில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தின சேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும் தளத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குப்பை மேட்டில் உயிரிழந்து கிடந்த யானை
இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், யானையை உயிருடன் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர், குப்பை மேடுகளைக் கடந்து யானை இருந்த இடத்தை சென்றடைந்த போது, அது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குப்பை மேடுகளில் உணவு தேடி வரும் வன யானைகள் பல்வேறு அபாயங்களை எதிர்கொள்வதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய தீர்வுகள் அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam